லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த நடிகை மடோனா ஸெபாஸ்டின், நான் ‘லியோ’ படத்தில் நடித்தது என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

கடைசி வரை லியோவில் நான் நடித்த கதாபாத்திரத்தை யாரிடமும் சொல்லவில்லை. இந்த படத்திற்காக அன்பறிவ் மாஸ்டர்கள் 2 வருடங்களுக்கு முன்பாகவே எனக்கு சண்டை பயிற்சி அளித்தார்கள்” என தெரிவித்துள்ளார்.