தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகை சுமதி 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் 20 படங்கள் வரை நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில் பேசிய சுமதி, “எனது கணவரின் ஒத்துழைப்புடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.

தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். நடிகைகள் என்றாலே லட்சங்களில் சம்பாதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.