தென்னிந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி (86) உடல் நலக்குறைவால் காலமானார். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தில் ராஜுவின் தந்தை கடந்து சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு திரை துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.