லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சென்சார் போர்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “படத்தையோ அல்லது டிரெய்லரையோ வெளியிடும் முன்பு தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும் என்பது விதி.

ஆனால், ‘லியோ’ டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிராத நிலையில் அதை எப்படி வெளியிட்டீர்கள்? தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லரை வெளியிட்டது கிரிமினல் அஃபென்ஸ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.