தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் வனிதா. இவரின் மூத்த மகளான ஜோவிகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல்வி குறித்து பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸில் கவனிக்கப்படும் நபராக வனிதாவின் மகள் மாறி உள்ள நிலையில் தமிழில் ஒரு படம் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க அவர் கமிட்டாகி உள்ளதாக வனிதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நடிப்பதற்கு கமிட்டானதாகவும் வீட்டில் இருந்து வந்த பிறகு நடிக்க தொடங்குவார் என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.