தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக உருவான பராசக்தி திரைப்படம் வெளியானது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவான இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்த நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் கண்டு ரசித்தனர். அந்த வகையில் நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் பராசக்தி படத்தை பார்த்த நிலையில் இது தொடர்பாக தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, பராசக்தி படத்தை பார்க்க தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த படம் நாம் கூட்டணி எதிர்கொள்ள போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாக பார்க்கப்படுகிறது என்று. ஆம் இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் உண்மையான வாழ்த்தும் கூட. மேலும் இந்தத் திரைப்படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றி திலகம் என்று பதிவிட்டுள்ளார்.