கரூர் துயரச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் முன்ஜாமீன் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதையடுத்து ஏழு நாட்களாக தலைமறைவாக உள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

“>

இதேவேளை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் “Grok” மூலம் “தமிழக அரசியல் வரலாற்றில் கைதுக்கு பயந்து எந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமறைவாகியிருக்கிறாரா?” எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு “தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை பதிவாகவில்லை” என அந்த AI பதிலளித்துள்ளது. Grok வழங்கிய இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.