நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வடமாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது தவிர ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை. தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை இது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
