“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பெயரில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தொகுதி வாரியாகப் பிரசாரம் செய்ய வேண்டிய அட்டவணையைத் தயார் செய்துள்ளார்.

​இந்தப் பிரம்மாண்ட பயணத்தில் உரையாற்றுவதற்காக 20 முக்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்துப் பேச உள்ளனர். பிப்ரவரி மாதம் முழுவதும் இந்த அரசியல் பரப்புரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.