நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டும்தான் சிறந்த சேவைகளை வழங்கி லாபத்தில் இயங்கி வருவதாக குறிப்பிட்ட பெரியகருப்பன், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
