தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரலாறு காணாத வகையில் 74 வருட அரசியலையே புரட்டி போட்டுள்ளார். அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் என்பது பிரிந்து வரும் நிலையில் வெளிநாட்டுகளிலிருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் கிட்டத்தட்ட 108 இடங்களை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறார். இன்னும் பெரும்பான்மைக்கு பத்து இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அர்ச்சனா எம்பி நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது, இலங்கை தமிழர்களின் நெஞ்சை கவர்ந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்க இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கச்சதீவை கேட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக நீங்கள் அவரிடம் ஒப்படைக்க தான் வேண்டும். பச்சைத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து விஜயிடம் கொடுங்கள். தமிழக மக்கள் கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றார். மேலும் எங்களுக்கு எப்போது தீவுப் பகுதிகளில் மின்சாரம் தரப்படும் என்ற கேள்வியோடு அர்ஜுனா என்று இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் கச்சத்தீவு இரண்டையும் விஜயிடமும் தமிழக மக்களிடமும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by A7tv News (@a7tvnews)