தமிழகத்தில் புதிய அத்தியாயமாக கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் நடிகர் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் இன்னும் 10 இடங்களுக்கு நடிகர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வி அடைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விஎஸ் பாபு 8795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை தோற்கடித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் 82997 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 74202 வாக்குகளையும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளையும் பெற்றிருந்தார். மேலும் இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனக்கு வாக்களித்த கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அதாவது சற்று முன் அங்கு சென்ற நிலையில் அவருடன் சென்ற சேகர் பாபு கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கிருந்த திமுகவின் தொண்டர்களும் கூட கதறி அழுதனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.. கண்ணீர் விட்டு அழுத சேகர்பாபு..!!#MKstalin #DMK #SekarBabu #TNElectionResults #ElectionResultWithNewsTamil24x7 #ElectionTopNews #NewsTamil24x7 pic.twitter.com/xY6vgDtHmj
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 5, 2026
