தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்