தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்திய நிலையில் அடுத்த மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் நடத்த இருக்கிறார்.

இந்த மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தற்போது மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை கட்சியினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து அந்த பகுதியில் பல இடங்களில் ஒட்டியுள்ளது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னதாக மதுரையில் நடிகர் விஜய் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நாகர்கோவிலில் விஜய் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

அந்த போஸ்டரில் மக்கள் விரும்பும் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் தலைவரே நாகர்கோவில் தொகுதியில் வருகிற தேர்தலில் போட்டியிட வேண்டும். மேலும் நம்முடைய கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்த ஆரம்பமாகட்டும் என்று எழுதப்பட்டுள்ளது.