தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். மெல்லிய மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகள்,கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.