தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ‘ஆஃப் பாயில்’ (பாதி வேகவைக்கப்பட்ட முட்டை) உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இறைச்சிகளை நன்கு வேகவைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும் என்றும், ஒருவேளை பறவைகள் இறந்தால் அவற்றை முறையாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் அமைச்சர் மா சுப்பிரமணியன் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இதனை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.