தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்டு, புதிய அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் கேசவ விநாயகம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். நீண்ட காலமாக இந்தப் பொறுப்பை வகித்து வந்த அவருக்கு, தற்போது ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தற்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமைப்பு பொதுச்செயலாளராகப் பணியாற்றி வரும் பிரஷோப் குமார், தற்போது தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடனுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்த பிரஷோப் குமார் தீவிரமாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
