நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது சுருட்டை முடி குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு, “எனக்குச் சுருட்டை முடி இருக்கலாம், ஆனால் யாருடைய பணத்தையும் சுருட்டியதில்லை” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த உரையாடலின் நடுவே, அரங்கின் பெரிய திரையில் திடீரென தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் புகைப்படம் தோன்றியது. உடனே, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் எழுப்பிய கரகோஷம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த ஆரவாரம் தமிழிசை, காளியம்மாள், சௌமியா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
புகைப்படத்தை பார்த்த தமிழிசை, விஜய் கையில் வேல் வைத்திருப்பது எனக்கு பிடித்துள்ளது என்று கூறியதோடு ஒரு நடிகருக்கு இத்தனை ஆதரவா?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியபின், “ஒரு நடிகருக்கு ஆதரவு கொடுப்பதுபோல் ஒரு மருத்துவருக்கும் ஆதரவு கொடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த கரகோஷ வீடியோ உடனடியாக டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டது, அதோடு தமிழக அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளும் இணைக்கப்பட்டன.
