போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகரும், தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளவருமான பவன் சிங், தனது மனைவி ஜ்யோதி சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதே நாளில், பவன் சிங்கின் வீட்டுக்கு வெளியே ஜ்யோதி சிங் பரபரப்பான காட்சி உருவாக்கியதையடுத்து, இருவரும் சமூக வலைதளங்களில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசிய நிலையில், பவன் சிங் செய்தியாளர்களிடம் உணர்ச்சி வசப்படைந்தார்.
भोजपुरी सुपस्टार पवन सिंह ने मीडिया से बातचीत के दौरान अपनी पत्नी ज्योति सिंह पर आरोप लगाए हैं. पवन सिंह का कहना है कि ज्योति सिंह ये सबकुछ खुद विधायक का चुनाव लड़ने के लिए कर रही हैं. #PawanSingh #JyotiSingh pic.twitter.com/z9GcCdxf6i
— UP Tak (@UPTakOfficial) October 8, 2025
“இது ஒரு குடும்ப பிரச்சனை. கடந்த 3–4 ஆண்டுகளாகவே விவாகரத்து வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. தேர்தலுக்குள்ளாக இதை கொஞ்சம் பரபரப்பாக்கிப் பிரச்சாரம் செய்வதற்காகவே ஜ்யோதி சிங் இது போல செய்கிறார்” என பவன் சிங் கூறினார். மேலும், “நானும் ஒரு மனிதன் தான். நானும் மன அழுத்தத்தில் தான் இருக்கிறேன். பெண்களுக்கு அழுகை வரும், எல்லாருக்கும் தெரியும். ஆனா ஆண்களின் வலி யாரும் பார்ப்பதில்லை, ஆண்களுக்கு வெளிப்படுத்தவே முடியாது” என உருக்கமாக பேசினார்.
மேலும், “என் குடும்ப பிரச்சனையை ரசித்து களைகட்டுகிறவர்கள் கவனிக்கட்டும்… இது ஒரு குடும்ப விஷயம். இவை கேமரா முன்பு பேச வேண்டிய விஷயமல்ல” எனக் கூறியுள்ளார். பவன் சிங்கின் இந்த உருக்கமான உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
