தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.