கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர்.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. *தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்பே தேர்வர்கள் வர வேண்டும். *ஹால் டிக்கெட்டுடன், ஆதார், பான் கார்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டை, கருப்பு மை பேனா கட்டாயம் கொண்டு வர வேண்டும்.