தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடம்தோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த நாளில் மாணவர்கள் புது ஆடை அணிந்து விழா எடுத்து காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓவியம், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.