நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு  சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக மிக முக்கிய ரயில் நிலையமாக ராசிபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் நிலையத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இங்கு மிக குறைந்த அளவில்தான் ரயில்கள் நின்று செல்கிறது. இதனால் வியாபாரிகளும், ரயில் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து டெல்லி மத்திய ரயில்வே தலைமை அலுவலக அதிகாரியை நேரில் சந்தித்து மிக முக்கியமான நான்கு எக்ஸ்ப்ரஸ் ரயில்களை ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி ராஜேஷ்குமார் மனு அளித்திருந்தார். இதனையடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட இவருடைய கோரிக்கைக்கு பின், ராசிபுரம் மற்றும் நாமக்கல் ரயில் பணிகள் மற்றும் பொது மக்களுடைய முன்னேற்றத்திற்காக ஜூலை மாதத்தில் இருந்து வண்டி எண். 16733/ 16734 ராமேஸ்வரம்-ஓஹா- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் . மற்றும் முக்கிய ரயில்கள் ராசிபுரம் ரயில்  நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.