நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை அழைத்துச் சென்று, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு பணியாற்றும் பள்ளித் தோழி டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், சுபாஷினியின் தம்பியான சுர்ஜித், கவினை வெளியில் அழைத்துச் சென்று வாளால் தாக்கிகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த கொலை ஆணவக் கொலையாகக் கருதப்பட்டதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித்தை கைது செய்து, அவரது மீது கொலை மற்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இத்தனை நாட்கள் ஆகியும் சூர்ஜித் தாயை கைது செய்ய வேண்டும். அவரையும் கைது செய்தால் தான் கவினின் உடலை வாங்குவோம் என அவரது தந்தை கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
