தூத்துக்குடி மாவட்டம் செல்சினி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் செந்தில். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பமில்லாததால் மகாலட்சுமி தொடர்வது மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் மகாலட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஹாலக்ஷ்மி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
