தமிழகத்தில் 12525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கலந்த வருடம் ஜூன் மாதம் பாரத் நெட் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 4,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத் நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஐந்தாயிரம் கிராம பஞ்சாயத்து களுக்கான பாரத் நெட் இணைய வசதிக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 7525 கிராமங்களுக்கு இந்த வருடம் இறுதிக்குள் இணைய வசதி வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக மிக குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய விதமாக செயல்படுத்தப்படும். இந்த திட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களுக்கு இடையேயான தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளியை குறைப்பதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக 1,627.83கோடியில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
