பெரும்பாலும் மக்கள் ஒரு பொருள் நல்லதாக இருந்தால் அது எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் பொருளின் தரத்திற்கு அதிகமான விலை இருக்கும் போது அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் பெருகிவிட்டதாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பாட்டில்களை குடிநீரை அடைத்து விற்பனை செய்து வருவதற்கே  பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த சூழலில் 650 மில்லி அளவு கொண்ட தண்ணீர் பாட்டில் 350 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரித்திகா போராஹ் என்ற பெண்மணி ஒருவர் தன்னுடைய twitter பதிவில், பெரிய ஹோட்டல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்த ஹோட்டலுக்கு மதிய உணவுக்காக சென்றபோது தண்ணீர் பாட்டிலுக்கு 350 ரூபாய் கட்டணம் விதித்தார்கள். எனவே நான் தண்ணீர் பாட்டிலை வீட்டிற்கு எடுத்து செல்ல திட்டமிட்டேன். ஏனென்றால் அதை மீண்டும் உபயோகபடுத்தலாம். இந்த நிகழ்வு எனக்கு மட்டும்தான் நடந்துள்ளதா? அல்லது உங்களுக்கும் நடந்ததா? என்று பதிவிட்டுள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். தண்ணீர் பாட்டில் அதற்கான விலையும் தயாரிக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.