தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆவணமாக குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முக்கிய ஆவணமாக குடும்ப அட்டை இடம் பெற்றுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பலரும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வதுடன் திருத்தங்களை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்தியில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை பெயர் நீக்கத்திற்கு விண்ணப்பித்தால் தாங்களாகவே ஒப்புதல் தராமல் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்பு அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.