தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும்.
அதன்படி மே 19ம் தேதி காலை 10 மணிக்கு 10ம் வகுப்புக்கும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.