தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் இன்று அதிமுகவிலிருந்து விலகி சென்ற நூறுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் போட்டி என கூற முடியாது. தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் சக்தி இருக்கிறது. தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மேலும் கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் மக்கள் சக்தி மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் ஆவார் என்றார்.