விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அருண்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இளவரசி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்தின்போது 70 சவரன் தங்க நகைகள் ஒரு கார் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் அருண்ராஜ் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவரது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பெண்ணின் தந்தை கருப்பசாமி திருமணத்தின்போது 81 சவரன் தங்க நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் தன்னுடைய மகளுக்கு கொடுத்ததாகவும் ஆனால் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அவரது கணவர் அடித்துக் கொன்று விட்டு தற்போது தற்கொலை செய்துவிட்டதாக நாடகமாடுவதாக புகார் கொடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவர்களுடன் படாததால் பின்னர் கைது செய்தனர். மேலும் அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் இதனை தன்னுடைய மகள் தட்டி கேட்டதாலே அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாக கருப்பசாமி அதாவது பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
