தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்த நிலையில் இன்று கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை இருந்த கட்டணம் இன்று 500 ரூபாய் முதல் 1000 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சாதாரண விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சொந்த ஊர் செல்லும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.