இந்தியாவில் அதிக அளவு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழக மாறாத இடத்தில் உள்ளதாக ஐ சி எம் ஆர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் அதிகபட்சமாக நகர்புறத்தில் 16.4 சதவீதம் பேருக்கும், கிராமப்புறங்களில் 8 புள்ளி 9 சதவீதம் பேருக்கும் பாதிப்பு உள்ளதாக கூறியுள்ளது. நீரிழிவு அதிகம் உள்ள மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், உத்திரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. இதில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 9.9% வரையும் கிராமப்புறங்களில் 10% அதிகமாக உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.