தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை மறுநாள் தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
