இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு உயர்கல்வி துறையால் SET, NET ஆகிய தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதே சமயம் மாநில அளவிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு SLET தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான இந்த தகுதி தேர்வு இனி ஒவ்வொரு வருடமும் முறையாக நடத்தப்படும் என்ற உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் இந்த தேர்வை நடத்தும் பணி ஒப்படைக்கப்படும் எனவும் இதன் மூலமாக இனி ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.