தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை என்னும் எழுத்தும் பயிற்சி 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது.

ஜூன் 3ஆம் தேதி சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள், ஜூன் ஏழாம் தேதி புதன்கிழமை கல்வியாண்டு தொடக்க நாள், ஜூன் 10ஆம் தேதி சனிக்கிழமை ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள், ஜூன் 17ஆம் தேதி பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 1 மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி திங்கள் முதல் சனி வரை தொல்லியல் பயிற்சி, ஜூன் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அற்பா RL. ஜூன் 29ஆம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.