12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு  +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று (மே.8)-19 வரை விண்ணப்ப பதிவு நடைபெறும். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.