இளைஞர் ஒருவர் தன்னை விட 26 வயது அதிகமான ஆசிரியையை திருமணம் செய்த விசித்திர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. அகமது அலி என்னும் இந்த மாணவர் (22) என்பவர் 2016ல் உயர்கல்வி படித்து வந்துள்ளார்.  அப்போது இவருக்கு மலாய் பாடம் நடத்தி வந்த ஆசிரியர் தான் ஜமீலா.  இந்நிலையில் மாணவர் அகமது அலி ஆசிரியையாக இருந்த ஜமிலாவை (48) காதலித்துள்ளார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஜமிலா, தொடக்கத்தில் காதலை நிராகரித்த போதும் பின் அகமதுவின் அன்பில் கரைந்துள்ளார். இந்நிலையில் இந்த ஜோடி இருவர் குடும்பத்தினரின் அனுமதி பெற்று  2021ல் திருமணம் செய்துள்ளது. தற்போது இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.