மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலின் கதவில் ஸ்கார்ஃப் கட்டி, அதில் தொங்கியபடி நபர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் கதவுகள் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கதவின் கைப்பிடியில் துணியைக் கட்டி, அதில் அமர்ந்தபடி பல கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.

மேலும் பார்ப்பவர்களுக்கே உடல் சிலிர்க்க வைக்கும் இந்த காட்சி, ரயிலில் இருந்த மற்ற பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. சற்றே பிடி நழுவினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையிலும், அவர் காட்டிய இந்த துணிச்சல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயிலின் உட்புறம் இடமில்லாத காரணத்தாலோ அல்லது த்ரில்லுக்காகவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். உடல் சிலிர்க்க வைக்கும் என்று மராத்தியில் வர்ணிக்கப்படும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் ரயில்வே காவல்துறையினர் இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இது போன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.