கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைக் கவரும் வகையில் பாஜக ஒரு பிரம்மாண்டமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது. கேரள மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும் தேசியத் தலைவருமான நிதின் நபின் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் கேரளாவில், பாஜகவின் இந்த நேரடிப் பயன் அளிக்கும் வாக்குறுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
