தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் கூறி வரும் “இருமுனைப் போட்டி” என்ற கருத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று ஓப்பனாகவே விமர்சித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஏற்கனவே ஆட்சி செய்த கூட்டணி, இனி ஆட்சி செய்யப் போகும் கூட்டணி என்று அதிரடியாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கருத்துக்களை முற்றிலுமாக நிராகரித்த நயினாரின் இந்தப் பேச்சு, தவெக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.