தனுசு ராசி அன்பர்களே,

இன்று மனம் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாளாக இருக்கிறது. சில முயற்சிகள் தாமதம் ஆவதால் மன சஞ்சலங்கள் கொஞ்சம் ஏற்படும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது நல்லது. பிறர் குறை கூறாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனமகிழும் சம்பவங்கள் கண்டிப்பாக நடைபெறக்கூடும். மன நிம்மதியும் மனோதிடமும் அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக இன்று பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் மாறும். மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்