விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். மனதில் ஏற்பட்ட சஞ்சலங்கள் விலகி செல்லும். தாயின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் தெளிவாக சிந்தித்து நல்ல முடிவு எடுப்பீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெண்கள் எதிலும் தீர்க்கமான முடிவை எடுப்பீர்கள். வெற்றி பெறும் சூழல் உள்ளது. நல்ல மனதுக்கு அதிபராக காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்ள முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். லட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்ள முடியும். பெற்றோருடன் கலந்தாலோசித்து எந்த முடிவையும் எடுக்க பாருங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: இளமஞ்சள் மற்றும் பச்சை நிறம்