துலாம் ராசி அன்பர்களே,

இந்த இனிய நாள் உங்களுக்கு பொன்னான நாளாக அமையும். தொழிலில் உங்களுக்கு மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை எட்டி விடுவீர்கள். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். மந்தமான நிலை காணப்பட்டாலும் வெற்றி ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்கள் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். காரியங்கள் அற்புதமாக நடக்கும். மாற்றங்கள் ஏற்படும். தயவு செய்து மன தடுமாற்றம் வேண்டாம். இன்று பெண்களுக்கு கவலைகள் நீங்கி முன்னேற்றங்கள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கவலைகளை விட்டு விட்டு படிப்பில் அக்கறை செலுத்துங்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்று தெரிந்து கொள்ளுங்கள். உற்சாகமாக செயல்பட முடியும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்