மகரம் ராசி அன்பர்களே,

இன்று அடுத்தவர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம். எல்லா வளமும் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக வரும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்று நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வெற்றி பெற முடியும். வாய்ப்புகளை மட்டும் நழுவ விட வேண்டாம்.

உல்லாச பயணங்களால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் என்று புதிய நட்பை உருவாக்கிக் கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மகரம் ராசியினருக்கு மன தைரியம் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். அனைத்து காரியங்களும் சாதகமாக நடக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும். பாடங்களில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதுப்புது விஷயங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்