மீனம் ராசி அன்பர்களே,

இன்று புது புது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். எல்லா வளமும் கண்டிப்பாக கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மன சஞ்சலம் ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும்.

யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். முறையற்ற வழிகளில் சென்றால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். உறவுகளுக்குள் சின்ன சின்ன பகை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் கிடைக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். பெண்கள் இன்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்.

எல்லாவற்றையும் அற்புதமாக செயல்படுத்துவீர்கள். வீண் குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும். உயர் கல்வி சிறப்பாக அமைந்து விடக்கூடும். தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவீர்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 4, 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்