கும்பம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் மனக்குழப்பம் இல்லாமல் கடந்து செல்ல முடியும். குழப்பம் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டால் மனக்கவலை ஏற்படலாம். இறைவன் அருளால் அற்புதம் நிகழக்கூடும். முயற்சிகள் வெற்றி கொடுக்கும். பதட்டம் வேண்டாம். நியாயமான கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிறர் குறை கூற வண்ணம் நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லா வளமும் பெருகும். சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெண்கள் இன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட பாருங்கள். சிந்தித்து எந்த செயலிலும் ஈடுபடுங்கள். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். சக நண்பர்களே அனுசரித்து செல்லுங்கள். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்