மேஷம் ராசி அன்பர்களே,

இன்று அதிக பணி காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாத நிலை உருவாகும். அலைச்சல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் போட்டிகள் படிப்படியாக குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும் சூழல் உள்ளது. சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுதலை பெறுவீர்கள். தொழில் முறை பயணங்கள் வெற்றியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

பெண்களுக்கு இந்த நாள் அக்கம் பக்கத்தில் உறவுகள் கைக்கூடும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். கல்வி மீது அக்கறை ஏற்படும். முயற்சியால் வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2, 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் பச்சை நிறம்