தனுசு ராசி அன்பர்களே,

இன்று காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதால் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். எதை நினைத்தும் பயம் வேண்டாம். இன்று மனைவி வழியில் உதவி கிடைக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். புனித பயணங்களால் லாபம் ஈட்டுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தீவிரமாக யோசித்து எந்த முடிவையும் எடுப்பீர்கள். திருமண காரியங்கள் கை கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம், சீராக நடக்கும். மன திருப்தி அதிகரிக்கும் இந்த நாள் இனிய நாளாகவே அமையும். பெண்கள்

இன்று வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2, 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்