மகரம் ராசி அன்பர்களே,

இன்று பெரிய உழைப்புக்கு பின் நல்லது நடக்கும். பணவரவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். லாபம் சீராக இருக்கும். இன்று மன அமைதியுடன் இருக்க தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்படக்கூடும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.

பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்பட்டு சரியாகும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது. இனிமையாக பேசுவதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மன சங்கடம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். இன்று அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெண்கள் இன்று வெளிவட்டார பழக்கவழக்கங்களை விரிவுபடுத்திக் கொள்வீர்கள்.

காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்பாக செயல்பட்டு கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்